முருங்கக்காய் விலை அதிகரிப்பு

0
180

drumstick(அப்துல்சலாம் யாசீம்)

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட காக்காமுனை, பைசல் நகர், குறிஞ்சாங்கேணி பகுதிகளில் தற்போது முறுங்கக்காயின் விலை அதிகரித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

முறுங்கக்காய்களை கிண்ணியாவிலிருந்து தம்புல்லைக்கு கொண்டு செல்ல ஆரம்பித்துள்ளதால் அப்பகுதியிலுள்ள மக்களுக்கும் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

கடந்த இரு வாரத்திற்குள் 1 கிலோ முறுங்கக்காயின் விலை 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 40 ரூபாயிற்கு விற்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை, முறுங்கக்காயை சில்லறை விலைக்கு வழங்காமல் மொத்தமாக விற்பனை செய்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.

LEAVE A REPLY