சீனாவில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 20 பேர் பலி

0
147

கிழக்கு சீனாவின் கடலோரப் பகுதியான செஜியாங் மாகாணத்தில் வென்ஸோ பகுதியிக் லுச்செங் என்ற தொழிற்பேட்டை உள்ளது. இந்த தொழிற்பேட்டையில் நாடுகடந்து வந்து சீனாவில் தஞ்சம் அடைந்து வாழும் பல நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து பிழைத்து வருகின்றனர்.

இவர்கள் தங்குவதற்காக உள்ளூர் மக்களால் கட்டி, வாடகைக்கு விடப்பட்டிருந்த ஆறு மாடி கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. அந்த கட்டிடத்தில் தங்கியிருந்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.

தகவல் அறிந்து விரைந்துவந்த மீட்புப் படையினர் முதல்கட்டமாக இடிபாடுகளில் சிக்கியிருந்த சிலரை வெளியேற்றியதுடன் 20 பிரேதங்களையும் கண்டெடுத்துள்ளனர்.

கட்டிட இடிபாடுகள் சுமார் மூன்றுமாடி உயரத்துக்கு குவிந்துள்ளதால், அவற்றை அகற்றி, அடியில் சிக்கியுள்ள மேலும் பலரை மீட்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY