இன்ஜின் திருடிய குற்றச்சாட்டில் கைதான மூன்று முஸ்லிம் இளைஞர்கள் விளக்கமறியல்

0
91

Prisoner+in+jail+cell+prison remand(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை-இறக்ககண்டி கடற்கரைப்பகுதியில் மீனவர்களின் படகில் பொறுத்தப்பட்டிருந்த 04 இன்ஜின்களையும் திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரையும் நேற்று (10) திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஷ்வானந்த பெர்ணான்டோ முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இம்மாதம் 19ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் நிலாவௌி, இறக்கக்கண்டி-04ம் வட்டாரத்தைச் சேர்ந்த எம்.ஆர்.எம்.சியாம் (29 வயது) குச்சவௌி, காசீம் நகர் பகதியைச் சேர்ந்த எம்.ஜே.எம்.நிஜாஸ் (18 வயது) மற்றும் ஹொரவ்பொத்தான, கபுகொல்லாவ பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.எச்.அலாப்தீன் (22 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மூவரும் இறக்கக்கண்டி, கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் பொறுத்தப்பட்டிருந்த இன்ஜின்களை திருடியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து குச்சவௌி பொலிஸ் பொறுப்பதிகாரி உதேன செனவிரத்ன தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு மூவரையும் கைது செய்ததுடன் விற்பனை செய்யப்பட்டிருந்த படகின் இன்ஜினையும் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட இன்ஜின்களையும் மூவரையும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்ட்டது.

LEAVE A REPLY