காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டங்கள்

0
609

hizbullah-dcp(முஹம்மட் பயாஸ்)

காத்தான்குடி மற்றும் ஆரயம்பதி பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டங்கள் நேற்று (10) மீகுடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இரண்டு பிரதேச செயலாளர்களதும் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேசத்தின் சில பிரச்சினைகளான வைத்தியசாலை ஆளனி பற்றாக்குறை, வீதிப்பிரச்சினை, மின்சார பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் ஆரயம்பதி பிரதேசத்தின் சில பிரச்சினைகளான குப்பை பிரச்சினை, தொல் பொருட்கள் தொடர்பான பிரச்சினை, அபிவிருத்திக்குழுக் கூட்டங்களில் பொதுமக்கள் மற்றும் பொது நிறுவனங்களின் தலைவர்களையும் அழைத்து இந்நிகழ்வுகளை நடாத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டதோடு ஆரயம்பதி தபாலகத்தை தரமுயர்த்தி தரும்படியும் முன்மொழிவுகள் வழங்கப்பட்டதுடன் சில பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் முன்மொழியப்பட்டது.

hizbullah-shiblyஇதன் போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறுக், காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர். ஜாபிர் காத்தான்குடி சம்மேளனத்தின் தலைவர் பொறியியளாலர் தெளபிக், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தினைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் ஆரயம்பதி பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கிழக்குமாகாண சபை உறுப்பினர்களான இந்திரக்குமார் நித்தியானந்தம், கோவிந்தன் கருநாகரம், ஞான முத்து கிருஸ்னப்பிள்ளை என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

whatsapp-image-2016-10-10-at-22-22-48

LEAVE A REPLY