கிண்ணியா பொலிஸ் தலைமையில் மக்கள் பொலிஸ் குழு உருவாக்கம்

0
304

fff(ஹஸ்பர் ஏ ஹலீம்)

மக்களின் பல்வேறு பிரச்சினைகள் சமூகம் சார் பிரச்சினைகள் போன்றவற்றை தடுத்தல் மற்றும் அதில் இருந்து பாதுகாப்பு பெறல் தொடர்பாக மக்கள் பொலிஸ் குழு உருவாக்கமும் புதிய உறுப்பினர்கள் தெரிவும் நேற்று திங்கட்கிழமை (10) மாலை 04.00 மணிக்கு கிண்ணியா பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.எம்.பி.விஜயசிரி தலைமையில் எகுத்தார் நகர் ஜாகுவாப் பள்ளி வாயலில் இடம் பெற்றது.

இதில் புதிதாக 30 பேர்களைக் கொண்ட தலைவர், செயலாளர் உட்பட மக்கள் பொலிஸ் குழு உறுப்பினர்கள் நிருவாகத் தெரிவு இடம்பெற்றதுடன் வீதிப் போக்குவரத்து விபத்துக்கள் தொடர்பாகவும், கிராமத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தல், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வு, குற்றங்களை கட்டுப்படுத்தல் மற்றும் சூழல் பாதுகாப்பு தொடர்பாகவும் விரிவான விழிப்புணர்வு உரையொன்றை கிண்ணியா பொலிஸ் பொறுப்பதிகாரி விஜயசிரி உரை நிகழ்த்தினார்.

மேலும் பெரியாற்றுமுனை களப்புப் பகுதியில் கொட்டப்பட்டிருக்கும் குப்பைகளை அகற்றுவதற்கான சிரமதானத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதில் கிராம அதிகாரி மக்கள் பொலிஸ் குழு பொறுப்பதிகாரியான உதவிப் பொலிஸ் உத்தியோகத்தர் B.புரோஜன் மற்றும் ஜாகுவா பள்ளி தலைவர் நிருவாக உறுப்பினர்கள் என ஊர்மக்களும் என பலரும் பங்கேற்றனர்.

ff

LEAVE A REPLY