நேற்று சில வார்த்தைகள் பேசியதாக அப்பலோ மருத்துவமனை தகவல்

0
404

முதல்வர் ஜெயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் நேற்று சில வார்த்தைகள் பேசியதாகவும் அப்பலோ மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 22-ம் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறது. ராகுல் காந்தி, வெங்கையா நாயுடு மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோர் முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரிக்க அப்பலோ மருத்துவமனைக்கு நேரில் வந்து சென்றுள்ளனர்.

இதனிடையே தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கேரள ஆளுநர் சதா சிவம் ஆகியோர் நேற்று பி.ப சுமார் 1.40 மணியளவில் அப்பலோ மருத்துவமனைக்கு வந்தனர்.

நீண்ட நாட்களாக அவர் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று அப்பலோ மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், நேற்று 18–வது நாளாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உடல் நிலையை தொடர்ந்து முன்னேற்றேம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். கண்காணித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் டில்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மருத்துவர்களில் ஒருவரான கில்நானி நேற்று இரவு 9 மணிக்கு சென்னை வந்தார். அவர் தொடர்ந்து, ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து வருகிறார். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் நேற்று சில வார்த்தைகள் பேசியதாகவும் அப்பலோ மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

Source: Thinakaran

LEAVE A REPLY