கொலன்னாவ வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

0
169

unnamed-3(அஸீம் கிலாபத்தின்)

இவ்வருடம் மே மாதம் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தம் காரணமாக கொலன்னாவ பிரதேசத்தில் தொழில்களையும் தொழில் உபகரணங்களையும் இழந்த 30 குடும்பங்கள் தமது தொழில்களை மீள் ஆரம்பிக்கும் நோக்குடன் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு செயற்படும் சிறிலங்கா முஸ்லிம் கலாசார நிலையம் – ஈஸ்ட் இலண்டன் IBA (UK) அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, RCC எனப்படும் நிவாரண ஒருங்கிணைப்பு நிலையம் ஆகிய அமைப்புகளின் நிதியுதவி மற்றும் அனுசரனையுடன் தொழில் உபகரணங்கள் அடங்கிய பொதிகள் கையளிக்கும் இரண்டாம் கட்ட நிகழ்வினை 8ம் திகதி சனிக்கிழமை நண்பகல் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா மேற்கொண்டது.

இந்நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாம் கட்ட வினியோகம் 32 குடும்பங்களுக்கு செப்டெம்பர் 9ம் திகதி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மெகடகொலன்னாவ, வென்னவத்த, கொகிலவத்த கிராமங்களைச் சேர்ந்த மேலும் முப்பது குடும்பங்கள் இவ் இரண்டாம் கட்ட வினியோகத்தில் பயன்பெற்றுக் கொண்டன.

முஸ்லிம் எய்ட் மேற்கொண்ட நேரடிக் களபதிப்பீடு மற்றும் பிரதேச செயலர் அனுமதியுடன் பயனாளிகள் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டு சில்லறைக் கடைகள், உணவகம், தையல், உணவுப் பொருட்களைப் பொதிசெய்து விற்றல், தச்சுத்தொழில் மற்றும் வால்டிங் போன்ற குடிசைக் கைத்தொழில்களை வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த பயனாளிகளுக்கான தொழில் உபகரணப் பொதிகள் இரண்டாம் கட்டத்தில் வினியோகிக்கப்பட்டன.

unnamed-0

IBA பிரதிநிதி சகோ. ரமீஸ்,ACJU வளவாளர் நமீஸ், RCC பிரதிநிதிகள் சகோ. ஹக்கீம், அன்வர் சதாத் ஆகியோருடன் முஸ்லிம் எய்ட் வதிவிடப் பிரதிநிதி சகோ. பைசர் கான் மற்றும் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் சகோ. அமீர் ஆகியோர் வினியோக நிகழ்வில் பங்கேற்றனர்.

பல்வேறு பட்ட பாதிப்புக்களை கடந்த வெள்ள அனர்த்தத்தின் போது கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவில் அடங்கும் மக்கள் சந்தித்தனர்.

அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

இருந்தபோதிலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தமக்குக் கிடைத்து வந்த சொற்ப வருமானத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட பல குடும்பங்கள் இன்னமும் தமது தொழில்களைத் மறுபடியும் தொடங்க முடியாதிருந்தமை முஸ்லிம் எய்ட் இன் கள ஆய்வு மூலம் தெரியவந்ததன் அடிப்படையில் மேற்படி புனர்வாழ்வுப் பொதிகள் வினியோகிக்கப்பட்டன.

மேலும் 200 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் அடுத்து வரும் மாதங்களில் இவ்வாறான தொழில் உபகரணப் பொதிகளை பெற்றுக் கொள்வதற்கான நடடிவடிக்கைகளை மேற்குறிப்பிட்ட நிறுவனங்களின் அநுசரணையுடன் முஸ்லிம் எய்ட் மேற்கொள்ளவுள்ளது.

LEAVE A REPLY