மஹிந்த ராஜபக்ஷ இன்று மட்டக்களப்பு விஜயம்; ஏற்பாடுகள் மும்முரம்

0
169

img-20161010-wa0040(பழுலுல்லாஹ் பர்ஹான்)

முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) செவ்வாயக்கிழமை மட்டக்களப்பு நகருக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

அங்கு விஜயம் செய்யும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரையில் இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாக மட்டக்களப்பு நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டக்களப்பு விகாரையில் கலந்து கொள்ளவுள்ள நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்னதேரர் தலைமையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

img-20161010-wa0043 img-20161010-wa0045

LEAVE A REPLY