கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியுஸின் மரண விசாரணை தொடக்கம்

0
176

சிட்னியில் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் ஆட்டத்தில் , ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியுஸ் அணிந்திருந்த தலைக்கவசத்திற்கு கீழே , கழுத்தில் பந்து பட்டு ஏற்பட்ட காயத்தால் இரண்டு நாள்களுக்கு பின்னர் அவர் காலமானது பற்றிய மரண விசாரணை யை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ளது .

கிரிக்கெட் விளையாட்டு வீரர் பிலிப் ஹியுஸின் இறப்பு தொடர்பான மரண விசாரணையை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிட்னியில் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் ஆட்டத்தில், அவர் அணிந்திருந்த தலைக்கவசத்திற்கு கீழே கழுத்தில் பந்து பட்டுக் காயமடைந்தார்

அந்தக் காயம் மூளையில் இரத்தக் கசிவை ஏற்படுத்தியது. காயம் பட்ட இரண்டு நாள்களுக்கு பின்னர் அவர் மருத்துவமனையில் வைத்து இறந்தார்.

வேறுபட்ட பாதுகாப்பு கருவி இந்த 25 வயதான விளையாட்டு வீரரின் உயிரை பாதுகாத்திருக்குமா என்பது பற்றி இந்த மரண விசாரணையை மேற்கொள்ளும் நீதிபதி சோதனை செய்வார்.

அதிநவீன தலைக்கவசமும், கழுத்துப் பாதுகாப்பும் இந்தச் சோக நிகழ்வை தடுத்திருக்கக்கூடும் என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற தனிப்பட்ட ஆய்வு தெரிவித்திருந்தது.

LEAVE A REPLY