பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

0
96

இங்கிலாந்து அமெரிக்கரான பொருளாதார நிபுணர் ஆலிவர் ஹார்ட் மற்றும் பின்லாந்து நாட்டின் பெங்க்ட் ஹோல்ம்ஸ்டிராம் ஆகியோர் கான்ட்ராக்ட் தியரிக்காக (ஒப்பந்தம் பற்றிய கொள்கை) ஆற்றிய பணிக்காக இந்த வருடத்தின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.

இது பற்றி நோபல் பரிசுக்குரிய நபரை தேர்வு செய்யும் நடுவர் கூறும்பொழுது, இந்த வருடத்தின் பரிசை வென்றுள்ளவர்கள் ஒப்பந்த கொள்கையினை உருவாக்கியுள்ளனர். அதன்படி, ஒப்பந்த வடிவமைப்பில் வேறுபட்ட பல விவகாரங்களை ஆய்வு செய்வதற்கான ஒரு விரிவான கட்டமைப்பினை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

அவற்றில், தலைமை உயர் அதிகாரிகளுக்கு சிறந்த பணியின் அடிப்படையில் சம்பளம் வழங்குதல், இன்சூரன்ஸ் பயனாளர்களுக்கான கழிவு மற்றும் பொது துறை நிறுவனங்களை தனியார் மயம் ஆக்கும் நடவடிக்கைகள் போன்றவையும் அடங்கும். அதற்கான ஒப்பந்த கொள்கையை அவர்கள் இருவரும் உருவாக்கி உள்ளனர் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY