முதல்வர் ஜெயலலிதாவுக்கு சுவாச உதவி, நோய் எதிர்ப்பு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது: அப்பல்லோ மருத்துவமனை

0
166

தமிழக முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22–ந் தேதி இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவர் உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவ்வப்போது மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 30–ந் தேதி முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் ஆஸ்பத்திரியில் நிபுணரான டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே வரவழைக்கப்பட்டார்.

இந்தநிலையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் கில்மானி நேற்றும், இன்றும் முதல்வர் ஜெயலலிதாவின் உடலை பரிசோதனை செய்தார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டாக்டர் கிலானி, அப்பல்லோ மருத்துவ நிபுணர்களிடம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சுவாச உதவி, நோய் எதிர்ப்பு மற்றும் உணவு ஏற்பு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது என்றும் அப்பல்லோ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

-Malai Malar-

LEAVE A REPLY