ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய 2 பேர் கைது

0
358

இந்தியாவின் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விவரங்களை அப்பல்லோ மருத்துவமனை அவ்வவ்போது அறிக்கை மூலமாக தெரிவித்து வருகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை தொடர்பாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து அதிமுக தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பேஸ்புக்கில் முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக, அ.தி.மு.க., தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் நாமக்கல்லை சேர்ந்த சதீஷ் குமாரையும், நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜ்கமால் அளித்த புகாரின் பேரில் மதுரையை சேர்ந்த மாடசாமி என்பவரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தமிழச்சி என்பவர் மீது இந்த விவகாரத்தில் குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY