மதுரங்கேணிக் குளத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக்காணிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

0
176

(எம்.ரீ. ஹைதர் அலி)

மட்டக்களப்பு மாவட்டத்தின், வாகரை – கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் மதுரங்கேணிக் குளம் கிராமத்தில் வசித்துவந்த அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் கடந்தகால யுத்தத்தினால் உயிர் அச்சுறுத்தலின் காரணமாக தங்களது சொந்த காணிகளையும் தாங்கள் வாழ்ந்த குடியிருப்புக்களையும் கைவிட்டவர்களாக இடம்யெர்ந்து சென்றனர்.

யுத்தம் நிறைவுற்றதன் பிற்பாடு இவர்களுக்கான மாற்றுக்காணிகளை கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புறையின் கீழ் வாகரை – கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் மாங்கேணி தெற்கு 211G, கிராம சேவையாளர் பிரிவிலுள்ள காரமுனை மீள்குடியேற்ற கிராமத்தில் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் சம்மந்தப்பட்ட சில அதிகாரிகளினால் இவற்றை பெற்றுக்கொடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது விடயமாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காரமுனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாக சபை தலைவருடன் தொடர்புகொண்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களை நேரில் சந்தித்து விடயங்களை தெரியப்படுத்தியற்கமைவாக கடந்த 2016.07.20ஆந்திகதி கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னான்டோ அவர்களை திருமலை அலுவலகத்தில் மாகாண சபை உறுப்பினர் இடம்பெயர்ந்த மக்கள் சார்பாக சந்தித்து கலந்துரையாடினார். அதன் பயனாக வாகரை – கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளரினால் பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் காரமுனை மீள்குடியேற்ற கிராமத்திற்கு அன்மையில் விஜயமொன்றினை மேற்கொண்டு அம்மக்களுக்கு வழங்குவதற்காக இனங்காணப்பட்டுள்ள பகுதிகளையும் நேரில்சென்று பார்வையிட்டதோடு, வாகரை பிரதேச செயலாளரை தொலைபேசியினூடாக தொடர்புகொண்டு இதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

அத்தோடு, 2016.09.22ஆந்திகதி நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வை தொடர்ந்து தங்களது மாவட்டங்களில் நிலவும் மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கப்படும் முகமாக அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்களை உள்ளடக்கியதாக குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY