இஸ்லாமிய இலக்கியத்தின் தோற்றுவாய் இலங்கையே: பேராசியர் சே.மு.முஹம்மலி

0
392

( நாச்சியாதீவு பர்வீன்)

இஸ்லாமிய இலக்கியத்தின் தோற்றுவாய் இலங்கையே. அதனை உருவாக்கிய பெருமகன் ம.மு. உவைஸ் அவர்கள் எப்போதும் இலக்கியத்திற்கூடாக வாழ்ந்து கொண்டே இருப்பார் என முன்னாள் பேராசியர் சே.மு.முஹம்மதலி  கூறினார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பான கலந்துரையாடல் பன்னாட்டு இஸ்லாமியக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் சேமு முஹம்மதலி தலைமையில் சென்னை,கோடம்பாக்கம் IAS Academy கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றும் போதே பேராசியர் சே.மு.முஹம்மலி  மேற்கண்டவாறு கூறினார்கள்.

தொடர்ந்தும் அவர் அங்கு கூறுகையில்

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் கடந்த 2002 ஆம் ஆண்டு மிகப்பெரிய உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை நடாத்திக்காட்டியது. அதில் காப்பிக்கோ ஜின்னாஹ் செரீப்தீன், மற்றும் கவிஞர் அஸ்ரப் சிஹாப்தீன் ஆகியோரின் பணிகள் மிகக் காத்திரமானவையாக இருந்தது. அதன் பின்னர் பல தடவை இன்னொரு மாநாடு நடத்துவது பற்றி அடிக்கடி பேசிக்கொள்வோம். அதற்கான சந்தர்ப்பத்தை எல்லாம் வல்ல இறைவன் தந்திருக்கிறான். அந்தவகையில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் இந்தப்பணியை செய்வது மிகுந்த சந்தோசமான விடயமாகும்.

இந்நிகழ்வில் பேராசியர் அஹமது மரைக்கார் பேசும்போது இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினரை வாழ்த்திப்பேசினார். குறிப்பாக 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினரால் நடாத்தப்பட்ட மாநாட்டைப்பற்றிய மனப்பதிவுகளை விதந்துரைத்தார்.

நிகழ்வில் பலர் உரைநிகழ்த்தினார்கள். அனைவரும் ஆய்வகத்தின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள். அனேகமானோர் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினரின் அர்பணிப்புடனான செயற்பாடுகளைப்பற்றி புகழ்து பேசினர்.

இந்நிகழ்வில் முனைவர் கம்பம் சாகுல் ஹமீது,எம்.ஜெய்லாப்தீன், முனைவர் அஹமது மரைக்கார், எஸ்.முஹம்மது இப்றாஹீம், கே.வி.எச்.கமர்தீன், பெருங்கவிக்கோ வ.சே.சேதுராமன், எஸ்.என்.சிக்கந்தர், கவிஞர் கார்முகிலோன், உதையை மு.வீரையன், காயல் மகபூப், கிளியனூர் இஸ்மத், தத்ததுவக்கவிஞர் இ.பதுர்தீன், கவிஞர் துருவன், சாத்தான்குளம் ஏ.ஜப்பார், சடையன் அமானுல்லாஹ், அரிமா இளங்கண்ணன்,அரிமா திவாகரன் இன்னும் பல தமிழ்,முஸ்லிம் சுமார் 75 க்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் பங்குபற்றினார்கள்.

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் காப்பிக்கோ ஜின்னாஹ் ஷெரீப்தீன், ஆய்வகத்தின் செயலாளரும் எழுத்தாளருமான அஸ்ரப் சிஹாப்தீன், ஆய்வகத்தின் பொருளாளார் நாச்சியாதீவு பர்வீன் ஆகியோர் அங்கு உரை நிகழ்த்தினர்.

நிகழ்வுகளை தமிழ் நாட்டுக்கான மாநாட்டு இணைப்பாளர் கவிஞர் ஜலால்தீன் தொகுத்து வழங்கினார்.

LEAVE A REPLY