பொலிஸ் நடமாடும் சேவை

0
403

20161010_103331(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை-மொறவெவ பொலிஸ் நிலையமும் சிவில் பாதுகாப்பு குழுவும் இணைந்து பொதுமக்களுக்கும், பொலிஸாருக்குமிடையில் நட்புறவையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் இன்று (10) காலை 10.00 மணியளவில் இலவச வைத்திய முகாமொன்று பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.டி.என்.குலதுங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அத்தாபெந்திவெவ ரஜமகா விகாரையில் ஆரம்பிக்கப்பட்ட இலவச வைத்திய முகாமில் வனவிலங்கு அதிகாரிகளினால் பொதுமக்களுக்கு காட்டு யானைகளின் தொல்லைகளிலிருந்து மீட்பதற்கு யானை வெடிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

20161010_100341அவ்வெடி பொருற்களை எவ்வாறு பாதுகாப்பது, எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு தௌிவு படுத்தப்பட்டதுடன் ஆயுர்வேத வைத்தியம், ஆங்கில வைத்தியம், இலவச கண்ணாடிகள் வழங்கல் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம், தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் என பல மக்கள் சேவைகள் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கோமரங்கடவெல-மொறவெவ பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் மகிந்த உடுகம விஷேட அதிதியாகவும் மொறவெவ பிரதேச வைத்திய பொறுப்பதிகாரி போல் ரொஷான் என பல அரச திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதில் ரொட்டவெவ-அத்தாபெந்திவெவ கிராம மக்கள் பயனடைந்தனர்.

LEAVE A REPLY