நேற்று காலை காத்தான்குடியில் காணாமல் போன குர்ஆன் மதரசா மாணவன் வீடுதிரும்பினார்

0
539

ama-basith-2(முகம்மட் அல் நகியான்)

நேற்று காலை காத்தான்குடியில் காணாமல் போன குர்ஆன் மதரசா மாணவன் நேற்று பி.ப. வேளையில்  வீடு திரும்பியுள்ளார்.

இவர் காணாமல் போனது தொடர்பில் தெரியவருவதாவது,

பாடசாலை கல்வியில் ஆர்வமின்மையால் குடும்பத்தினரால் குறித்த மாணவன் குர்ஆன் மதர்ஸாவுக்கு அனுப்பப்பட்டுளார்.

பாடசாலையிலோ குர்ஆன் மதராசாவிலோ கல்வி கற்க தனக்குள்ள ஆர்வமின்மையால் யாரிடமும் சொல்லாமல் காத்தான்குடியில் சன நடமாற்றமற்ற பகுதியொன்றில் காலையில் இருந்து பிற்பகள் வரை ஒளிந்துகொண்டிருந்தவர் பிற்பகள் 2.00 மணியளவில் வீடுதிரும்பியுள்ளார்.

குறித்த மாணவனின் குடும்பத்தினரால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் மாணவன் காணாமல் போனது தொடர்பாக பதியப்பட்ட முறைப்பாடு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY