செல்பி எடுக்கமுற்பட்டபோது விபரீதம் ஓமானில் இலங்கை யுவதிகள் பலி

0
352

இலங்கை யுவ­தி­க­ளான இரு மாண­விகள் ஓமான் நாட்டில் நீரில் மூழ்கி பலி­யா­கி­யுள்­ளனர்.

தத்­த­மது குடும்­பத்­தி­ன­ருடன் சுற்­றுலா மேற்­கொண்­டி­ருந்த இரண்டு யுவ­தி­களும், செல்பி எடுக்க முயற்­சித்த போதே இந்த விபத்து ஏற்­பட்­டுள்­ள­தாக ‘டைம்ஸ்ஒப்ஓமான்’ செய்தி வெளியிட்­டுள்­ளது.

இரு­வரும் செல்பி எடுத்துக் கொண்­டி­ருக்கும் போது ஒருவர் வழுக்கி நீரில் விழுந்­த­தை­ய­டுத்து, குறித்த மாணவி காப்­பாற்றும் முயற்­சியில் மற்­றைய மாணவி ஈடு­பட்­டுள்ளார்.

இதன்­போது அந்த யுவ­தியும் நீரினுள் விழுத்­துள்ளார்.

இரு­வரும் நீர் இருக்கும் ஆழ­மான இடத்தில் விழுந்­துள்­ள­தாக குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது.

எவ்­வா­றா­யினும் குறித்த யுவ­திகள் இரு­வ­ரையும் காப்­பாற்றி சுல்தான் கபூஸ் மருத்­து­வம­னையில் அனு­ம­தித்த போதும், ஏற்­க­னவே அவர்கள் இறந்து விட்­ட­தாக வைத்­தி­யர்கள் அறி­வித்­துள்­ளனர்.

ஓமா­னி­லுள்ள இந்­திய பாட­சா­லையில் கல்விப் பயிலும் ருவான் தில்­சாரா ஹேரத் சம­ர­வீர எனும் யுவ­தியும், தனியார் பாட­சா­லையில் கல்விப் பயிலும் அவரின் நண்பி சைனப் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

Source: Vidivelli

LEAVE A REPLY