தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு மட்டக்களப்பில் ஈரோஸ் அமைப்பு ஆதரவு

0
167

003(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற அவர்களின் தொடர் போராட்டததிற்கு தாங்களும் ஆதரவு தெரிவிப்பதாக ஈரோஸ் ஜனநாயக முன்னணி மட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டத்தரின் மூலம் அறிவித்துள்ளது.

இன்று (10) திங்கட்கிழமை மட்டக்களப்பு நகர மணிக்கூட்டுக் கோபுர சுற்று வளைவில் இந்த கவன ஈர்ப்புப் போராட்டத்தை நடத்தியது.

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தலைவர் ஜி. சவுந்தரநாயகம் தலைமையில் இது இடம்பெற்றது.

‘சம்பள உயர்வு கோரிய போராட்டத்தில் கம்பனி முதலாளிமாரே தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே, சம்பள உயர்வுடன் நிலுவைத் தொகையினை முழுமையாக வழங்கு, தொழிலாளர்களைக் காட்டிக் கொடுக்காதே, உழைப்பிற்கு ஊதியமும் வாழ்வாதாரத்திற்கு வேலை நாட்களும் வழங்கு, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கை ரூபாய் 1000 உடன் வழங்கு போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கவன ஈர்ப்பாளர்கள் ஏந்தியிருந்தனர்.

001 005 002

LEAVE A REPLY