வளர்ப்பு

0
228

funny-boy-digital-art-3989(Mohamed Nizous)

வளர்ப்பில பிழையா
வளர்த்துப் போட்டு
கிளப்பில சண்டை
கிளப்புறான் என்று
புலம்பலில் உண்டா
புண்ணியம் ஏதும்?

அஞ்சாம் வயசில
அடக்க இல்லை.
கஞ்சா அடிக்கிறான்
காலம் போக
கெஞ்சினால் இப்ப
கேட்பானா அவன்?

சீனா இந்தியாண்ணு
பறக்கார் டாடி.
வீணா வளர்கிறான்
வீட்டுப் பிள்ளை.
நானா பிறகு பிதற்றுகின்றார்
நம்ம புள்ள கெட்டுப் போனான்.

சிகரட் எடுத்திட்டு
சீக்கிரம் வாடா
அகரம் படிக்க முன்
அனுப்பிறார் அப்பா.
தகராறு வந்த பின்
வருந்திப் பயனா?
தம்பி வளர்ந்த பின்
திருந்திடுவானா?

டடா கொடுக்கின்றார்
டச் போண்கள்
கிடா போல வளர்கிறான்
கிறுக்கனாய் அவனும்
படாத பாடு படுகிறார்
பின்னால்
பள்ளத்தில் அ-டடா விழுகிறார்
தன்னால்

மேய்ப்பை சரியாய்
செய்ய மறந்து
வாய்ப்பை வீணாய்
வழுக விட்டு
ஆப்பு நன்றாய்
அடைத்த பின்னால்
அழுவதில் தீருமா
அவலங்கள்?

LEAVE A REPLY