சிறுவன் துஷ்பிரயோகம்; சிறுவர்களுக்கு விளக்கமறியல்

0
147

Prisoner+in+jail+cell+prison remand(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை, ஜமாலியா பகுதியில் 11 வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரண்டு சிறுவர்களையும் நேற்றைய தினம் (09) திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஷ்வானந்த பெர்ணான்டோ முன்னிலையில் ஆஜர்படுத்திய வேளை எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

ஜமாலியா கடற்கரையில் நின்று கொண்டிருந்த சிறுவனை குழுவாக சேர்ந்து சிலர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

திருகோணமலை தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY