எத்தியோப்பியா நாட்டில் அவசர நிலை பிரகடனம் அறிவிப்பு

0
207

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தொடர் போராட்டங்கள் பல இடங்களில் வன்முறை சம்பங்களாக மாறுவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

மக்கள் சாலைகளில் திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஒரோமியா பகுதியில் அதிக அளவிலான போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், தொடர் வன்முறை சம்பவங்களின் எதிரொலியாக, எத்தியோபியா அரசு அவசர நிலை பிரகடனம் அறிவித்துள்ளது.

நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதம மந்திரி ஹாய்லிமரியம் தேசலிக்ன் தெரிவித்துள்ளார்.

கடந்த 25 வருடங்களில் முதன் முறையாக அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த அவசர நில பிரகடன உத்தரவு 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும்.

முன்னதாக நாட்டில் ஏற்பட்டுள்ள சேத நிலவரம் குறித்து ஆலோசனை நடத்திய அந்நாட்டு மந்திரிகள் பின்னர் அவசர நிலை பிரகடன உத்தரவு பிறப்பிக்கும் முடிவிற்கு வந்தனர்.

LEAVE A REPLY