வயோதிபர் பஸ்ஸிலிருந்து இறங்கும் போது கால் தவறி விழுந்து சில்லுக்குள் சிக்கி பரிதாபமான மரணம்

0
276

(அப்துல்சலாம் யாசீம்-)

திருகோணமலை-புத்தளம் பிரதான வீதியில் பஸ்ஸில் பயணித்த வயோதிபர் பஸ்ஸிலிருந்து இறங்கும் போது கால் தவறி விழுந்து பஸ்ஸின் சில்லுக்குள் சிக்கி பரிதாபமான நிலையில் நேற்று (09) உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தான-மொறகேவ 77ம் கட்டை பகுதியைச்சேர்ந்த மதுராக பிரதிலாகே ஞானசிறி (76வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- அனுராதபுரத்திலிருந்து அவரது வீட’டுக்கு வரும் போது வருகை தந்த பஸ்ஸிலிருந்து முன் கதவால் இறங்கும் போது கால் தவறி பின் புறமாகவுள்ள சில்லுக்குள் சிக்குண்டதாகவும் அவ்விடத்தில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இடத்தை பார்வையிடுவதற்காக கெப்பித்தித்திகொள்ளாவ மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் அஜித் திஸாநாயக்க சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்கு உற்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

சடலம் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை ஹொரவ்பொெத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY