சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரத்ன தலைமையிலான குழு பலஸ்தீன் பயணம்

0
240

-அஹமட் இர்ஷாட்-

இலங்கை பாராளுமன்றத்தின் குழு சார்பாக சுகாதார அமைச்சர் ராஜிதசேனரத்ன தலைமையிலான பராளுமன்ற குழுவினர் நாளை 10.10.2016 தொடகம் இம்மாதம் 15ம் திகதி வரை பாலஸ்தீனத்திற்கன விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக பாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் பெளசான் அனவர் இன்று  தெரிவித்தார்.

மேலும் குறித்த விடயம் சம்பந்தமாக தனது கருத்தினை தெரிவித்த பெளசான் அன்வர்.,

சுகாதார அமைச்சருடன் சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களான செயித் அச்லிஷாஹிர் மெளலானா, மற்றும் பிமல் ரட்நாயக்க, காதர் மஸ்தான், சிவ மோகன் ஆகியோர்களும் வருகை தரவுள்ளதாக தெரிவித்தார்.

இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இருந்து வருக்கின்ற நட்புறவினை மேலும் அதிகரிக்கும் முகமாகவும் பாலஸ்தீன மக்களின் எதிர்கால நிம்மதிக்காக சர்வதேசத்தின் பார்வையினை பாலஸ்தீனத்தின் மீது திருப்பும் முகமாக இவ்விஜயம் அமையப்போகின்றது எனவும் பெளசான் அன்வர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY