அமெரிக்க பெண்ணுடன் Vedio Chat செய்த சவுதி வாலிபருக்கு சிறை

0
455

சவுதி அரேபியை சேர்ந்த அபு சின்(19) என்பவர் அமெரிக்க இளம்பெண்ணுடன் இணையதளத்தில் வீடியோ சாட் செய்தார். இவர்களின் உரையாடல் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவியது.

அதைத்தொடர்ந்து சவுதி காவல்துறையினர் நெறிமுறையற்ற நடத்தை காரணமாக அந்த வாலிபரை கைது செய்தனர். ஒரு வார கால காவல்துறை காவலுக்கு பின் அபு சின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே சவுதியில் இயங்கும் இணையதள பிரபலங்கள் பலரும் இந்த இளைஞனுக்கு ஆதாரவான கருத்துகளை வெளியிட்டனர். இதுகுறித்து சவுதி காவல்துறை தலைமை அதிகாரி கூறியதாவது:-

அபு சின் சவுதி அரேபியாவின் சைபர் குற்றவியல் சட்டப்பிரிவு 6-ஐ மீறியுள்ளார். அவர் மீதான வழக்கு விசாரணையில் உள்ளது. அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டால் 5 ஆண்டுகள் சிறை உறுதி செய்யப்படலாம் என்று கூறினார்.

LEAVE A REPLY