மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளில் மோதியதில் வயோதிபர் பலி.!

0
179

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

விபத்தில் கணேசமூர்த்தி (70) என்பவர் உயிரிழந்துள்ளதுடன் இன்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, களுவாஞ்சிகுடியை சேர்ந்த வடிவேல் கிருஸாந்த்(18)என்னும் இளைஞன் படுகாயமடைந்துள்ள நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எருவில் பழைய பொலிஸ் நிலையம் வீதியில் சென்ற முதியவரின் மீது வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-Virakesari-

LEAVE A REPLY