ரஷ்யா நாட்டவரான அலெக்ஸாண்டர் முரோமொஸ்கியின் சாதனை முறியடிப்பு: இலங்கை இளைஞர் புதிய கின்னஸ் சாதனை

0
215

ஒரு நிமி­டத்தில் 12 மில்­லி­மீற்றர் தடிப்­பான 12 உருக்குக் கம்­பி­களை வாயில் வைத்து வளைத்து இளைஞர் ஒருவர் சாதனை படைத்­துள்ளார்.

கொழும்பு துறை­முகத்தில் கொள்­கலன் பகு­தியில் இயந்­திர இயக்­கு­ந­ராக கட­மை­யாற்றிவரும் ஹங்­கு­ரன்­கெத – கிதுல்­பேவை சேர்ந்த காஞ்­சன முதந்­நா­யக்க என்ற 30 வய­தான இளை­ஞரே புதிய கின்னஸ் சாத­னையை நிலை­நாட்­டி­யுள்ளார்.

இதன்­மூலம் உல­கி­லேயே மிகவும் சக்­தி ­மிக்க பற்­களை கொண்ட நப­ரென கின்னஸ் புத்­த­கத்தில் தனது பெய­ரையும் பதித்துக் கொண்­டுள்ளார்.

கொழும்பு முகத்­து­வாரம் துறை­முக வளாக மகா­வலி பயிற்சி நிறு­வ­னத்தில் விளை­யாட்டு வைத்­திய அதி­காரி, அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க ஆகியோர் முன்­னி­லையில் இந்த சாத­னையை நிகழ்த்­தி­யி­ருந்தார்.

இதற்கு முன்னர் ரஷ்யா நாட்­ட­வ­ரான அலெக்­ஸாண்டர் முரோ­மொஸ்கி என்­பவர் ஒரு நிமி­டத்தில் இவ்­வா­றான 12 கம்­பி­களை தனது தலையில் வைத்து வளைத்து இச் ­சா­த­னைக்கு சொந்­தக்­கா­ர­ரா­கி­யி­ருந்தார்.

வாயில் வைத்து இவ்­வாறு 12 உருக்குக் கம்­பி­களை வளைத்­ததன் மூலம் முதந்­நா­யக்க இச்­ சா­த­னையை முறி­ய­டித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வாறே ஜன­வரி மாதம் 1.5 டொன் எடை­யு­டைய 10 வாக­னங்­களை தனது உட­லுக்கு மேலாக செலுத்த விட்டு கின்னஸ் சாதனை புரி­வ­தற்கு மேற்­கொண்­டி­ருந்த இவ­ரது முயற்சி தோல்வி கண்­டி­ருந்­தது.

அதன்­போது அவ­ரது உட­லுக்கு மேலாக மூன்­றா­வது வாகனம் பய­ணிக்கும்போதே அவ்­ வா­க­னத்தின் கோளா­றினால் அது அவ­ரது உடல் மேல் நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது.

இதனால் ஏற்ப்­பட்ட அசா­தா­ரண உடல்­நி­லையின் கார­ண­மாக அவ­ருக்கு உட­ன­டி­யாக முத­லு­தவி அளிக்­கப்­பட்­டது.

எனினும் அதன்­பின்னர் அவர் தனது சாதனையை கைவிடாது சாதனை முயற்சியை தொடர முற்பட்டபோது வைத்தியர்களின் வேண்டு கோளுக்கு இணங்க அந்த முயற்சியைக் கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

–MN-

LEAVE A REPLY