டெல்லி விமான நிலையத்தில் கதிர்வீச்சு கசிவு, புற்றுநோய் மருந்தில் இருந்து வெளியேறியதாக போலீஸ் தகவல்

0
173

டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட கதிர்வீச்சு கசிவு, புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்தில் இருந்து வெளியேறியதாக போலீஸ் தகவல் தெரிவித்து உள்ளது.

டெல்லி விமான நிலையத்தில் இன்று சரக்கு முனையத்தில் கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்து பயணிகளை அதிகாரிகள் வெளியேற்றினர். உடனடியாக தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் அப்பகுதிக்கு சென்றனர். அப்பகுதியில் சோதனையை மேற்கொள்ள சிறப்பு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் 7 வண்டிகளில் அங்கு சென்றனர். சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், மருத்துவ உபகரண பொருட்களில் இருந்து இந்த கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டது என்று தெரிவித்தனர்.

ஏர் பிரான்ஸ் விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட புற்றுநோய் சிகிச்சை மருந்தில் இருந்து கதிர்வீச்சு கசிந்து உள்ளது என்று அதிகாரிகள் கூறிஉள்ளனர். இப்போது அங்கு நிலையானது சீரடைந்துவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“கதிர்வீச்சு கசிவானது மிகவும் சிறிய அளவிலானது, இதுதொடர்பாக கவலைக்கொள்ள எதுவுமில்லை,” என்று அதிகாரிகள் கூறிஉள்ளனர். முன்னதாக விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தது.

LEAVE A REPLY