கல்முனை பிரதேசத்திற்கு சட்ட விரோதமான கொண்டு செல்லப்பட்ட மாடுகளையும் ஏற்றிச் சென்ற வாகனமும் கைது

0
275

(வாழைச்சேனை நிருபர்)

ஓட்டமாவடி ரிதிதென்ன பகுதியில் இருந்து கல்முனை பிரதேசத்திற்கு சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட பத்து மாடுகளையும் அதனை ஏற்றிச் சென்ற வாகனத்தினையும் சந்தேக நபர் ஒருவரையும் நேற்று (08.10.2019) வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஓட்டமாவடி ரிதிதென்ன பகுதியில் இருந்து கல்முனை பிரதேசத்திற்கு “எல்ப்ரக” வாகனத்தில் அனுமதிப்பத்திரம் இன்றியும் மிருகவதைச்சட்டத்திற்கு முறனான முறையிலும் மாடுகளை கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.

நேற்று அதிகாலை இரவு நேர வீதிப்போக்குவரத்து கடமையில் ஈடுபட்ட பொலிஸாரே மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் தியாவட்டவான் பிரதேசத்தில் வைத்து குறித்த வாகனத்தில் மாடுகளை ஏற்றி வந்த சமயம் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY