சட்டவிரோதமான முறையில் வெடிமருந்துகளை வைத்திருந்த மூவர் கைது

0
150

(அப்துல்சலாம் யாசீம்-)

திருகோணமலை கிண்ணியாவில் சட்டவிரோதமான முறையில் ஆறு கிலோவும் 45 கிராமும் வெடிமருந்துகளை வைத்திருந்த மூவரை நேற்று சனிக்கிழமை (8)மாலையில் கைது செய்துள்ளதாக திருகோணமலை குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிண்ணியா ,மற்றும் மூதூர் பகுதியைச் சேர்ந்த 57,மற்றும் 55, 48 வயதுடைய மூவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபர்கள் ஆறு கிலோவும் 45 கிராம் வெடிமருந்துகளை வைத்திருந்த நிலையிலே திருகோணமலை குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்ததகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாகவும் சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிப்பதோடு,சம்பவம்தொடர்பான விசாரணைகளை திருகோணமலை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY