மஸ்ஜிதுல் சுஹதா பள்ளி வாசலுக்கு ஒலிபெருக்கி வழங்கி வைப்பு

0
149

(அப்துல்சலாம் யாசீம்-)

திருகோணமலை-மிரிஸ்வெவ மஸ்ஜிதுல் சுஹதா பள்ளி வாசலுக்கு இன்று (09) காலை சமூக அபிவிருத்தி நிதியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஏ.எம்.எம்.அமீனினால் ஒலிபெருக்கி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்து.

ரொட்டவெவ மஸ்ஜிதுல் ஹுதா ஜூம்மாப்பள்ளி வாசலின் தலைவர் மௌலவி அத்துல் சத்தாரிடம் வழங்கி வைத்ததுடன் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் கணவரை இழந்த விதவைகளுக்கு சுயமெதாழில் ஊக்குவிப்பு திட்டத்தினையும் ஆரம்பிக்குமாறு விவசாய சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.எம்.பைசர் வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை பள்ளி வாசல் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தந்த இந்த சமூக அபிவிருத்தி நிதியத்திற்கு கிராம மக்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் நிர்வாக சபையினர் தெரிவித்தனர்.

இதில் கிராமத்திலுள்ள முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY