கிழக்குமாகாண ஆசிரியர்கள் தொடர்பில் பிரதமருடனான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது: முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

0
357

கல்வியல் கல்லூரி -2016 கற்கை முடித்து வெளியாகிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 407 ஆசிரியர்களில் 192 ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்துக்கும் மீதமான 215 ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்திற்கு வெளியேயும் நியமித்ததில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று காலை பிரதமர் ரணில் விக்ரம சிங்கவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினார்.

வெளிமாகாணத்தில் நியமிக்கப் பட்ட ஆசிரியர்கள் தொடர்பாகவும் கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் தொடர்பாகவும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது. இதன்போது கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு 2013ஆம் ஆண்டில் இருந்த வெற்றிடமான கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகியவற்றுக்கு 1134 ஆசிரியர்களுக்கான வெற்றிடத்தில் கடந்த மாதம் 390 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதனால் மீதமான 744 ஆசிரியர்களுக்கான நியமனம் பட்டதாரிகளில் இருந்து வழங்கவும், கிழக்கு மாகாணத்துக்கு வெளியே நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்துக்கே நியமிக்கவும் பிரதமர் ரணில் விக்ரம சிங்க முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமதிடம் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 09.10.2016 கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இச் சம்மதம் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY