ஏறாவூரில் 2482 குடும்பங்கள் வறட்சியினால் பாதிப்பு

0
182

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் சமீபத்திய கடும் வறட்சி காரணமாக 2482 குடும்பங்களைச் சேர்ந்த 9956 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தெரிவித்தார்.

இதுபற்றி மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவித்த பிரதேச செயலாளர், இந்தக் கடும் வறட்சி மேற்படி குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு கனிதரும் மரங்களும் கருகியுள்ளன.

அதேவேளை கிணறுகளும் வற்றியுள்ளன. வீட்டு வளர்ப்பு மிருகங்களும் இந்த அகோர வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான நிவாரணத் திட்டங்கள் எதுவும் இதுவரை அமுலாக்கப்படவில்லை என்றும் பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY