இறுதி அஞ்சலி செலுத்த திரண்டவர்கள் மீது தாக்குதல்: 140 பேர் பலி

0
241

ஏமனில் சவூதி தலைமையிலான கூட்டணி படையினர், இறுதி சடங்கு நிகழ்வை குறிவைத்து நடத்திய வான்வழித் தாக்குதலில் 140 பேர் கொல்லப்பட்டதாக ஹூதி போராளி அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஒரு முன்னணி போராளியின் உறவினரின் இறப்பை தொடர்ந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரண்டவர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஏமன் தலைநகரை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களை எதிர்த்து ஏமன் அரசாங்கம் சண்டையிட்டு வருகிறது.

ஏமன் அரசிற்கு சவூதி தலைமையிலான கூட்டணி படையினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த சமீபத்திய தாக்குதல் குறித்து சவூதி தலைமையிலான கூட்டணி படை கருத்து தெரிவிக்கவில்லை.

_91633698_8b3709d1-60c1-46d0-9b52-1fc640e48456

LEAVE A REPLY