வறியவர்களுக்கான வீடுகள் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் கையளிப்பு

0
366

(MSM.சுஜா)

சிறிலங்கா ஹிறா பெளண்டேஷனால் மேற்கொள்ளப்பட்டுவரும் நாடலாவிய சமுக நலத்திட்ட பணிகளில் ஒன்றான ஏறாவூர் மஜீத்புர வீட்டுத்திட்டத்திலிருந்து வறிய இரண்டு குடும்பங்களுக்கான வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இராஜாங்க அமைச்சரின் காத்தான்குடி காரியாலயத்தில் இன்று இடம்பெற்றது.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் கீழ் இயங்கும் சம்மேளன நலன்புரி அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஏறாவூரைச் சேர்ந்த குறித்த இரு குடும்பங்களுக்கான வீடுகள் மீள் குடியேற்ற புனர்வழ்வு இராஜாங்க அமைச்சரும், சிறிலங்கா ஹிறா பெளண்டேஷனின் தலைவருமான அல்ஹாஜ் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ்வினால்  இன்று வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சம்மேளன உறுப்பினர்கள், ஹிறா பெளண்டேஷனின் வீட்டுத்திட்ட பொறுப்பாளர் எம் எஸ் எம் நெளசாட் உட்பட ஊர்ப்பிரமுகர்கர்கள், உலமாக்கள், என பலரும் கலந்துகொண்டனர்.

3a67b77d-93bb-49b0-81c0-49db5674e085

44b6ac71-74a4-4117-9fe9-63964c31ca60

LEAVE A REPLY