68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த 13 வயது மாணவி உயிரிழப்பு

0
334

இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த, 8 ஆம் வகுப்பில் கல்வி பயின்ற மாணவியான ஆராதனா (13) என்பவர் ஜீவசமாதி அடையத் தீர்மானித்தார்.

இவரது தந்தை செகந்திராபாத் பகுதியில் உள்ள பாட்பஜார் பகுதியில் பிரபல நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

சைன மதத்தவர்களின் ‘சந்த்தாரா’ எனப்படும் ஜீவசமாதி நிலையை அடைய எண்ணிய ஆராதனாவின் உண்ணாநிலை சமீபத்தில் பத்தாவது வாரத்தை நெருங்கியபோது, உள்ளூர் ஊடகங்களில் ஏராளமான விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.

செகந்திராபாத் பகுதியைச் சேர்ந்த தெலுங்கானா மாநில அமைச்சர் பத்மா ராப் கவுட் முன்னிலையில், 68 நாட்கள் கழித்து தனது உண்ணாவிரதத்தை ஆராதனா முடித்துக்கொண்டார்.

இதையடுத்து, தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆராதனா, இருநாட்களாக அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY