வானில் 11 ஆயிரம் மீற்றர் வரை சாம்பல் ; மக்களுக்கு கடும் எச்சரிக்கை

0
210

ஜப்பானின் குமாமோட்டோ பகுதியிலுள்ள “அஸோ” எரிமலை 36 ஆண்டுகளாக மவுனம்காத்து வந்த நிலையில் இன்று திடீரென வெடித்துச் சிதறியுள்ளது.குறித்த எரிமலை பயங்கரமான தீப்பிழம்புகளை மலையில் அடிவாரத்தை நோக்கி கொண்டுவருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த எரிமலை கக்கிவரும் சாம்பல் வானில் சுமார் 11 ஆயிரம் மீட்டர் உயரத்தை நோக்கி பாய்ந்து செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் எரிமலையில் இருந்து பாறைகள் வெடித்து சிதறும் என்பதால் பொதுமக்கள் யாரும் மலையை நெருங்கிச் சென்றுப் பார்க்க முயற்சிக்க வேண்டாம் என அந்நாட்டு அரசாங்கத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY