15 வயது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாரூக் ரமீஸ்க்கு விளக்கமறியல்

0
316

(அப்துல்சலாம் யாசீம்-)

திருகோணமலை. கிண்ணியா. இடிமன் பகுதியில் 15 வயது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் தந்தையை திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஷ்வானந்த பெர்ணான்டோ முன்னிலையில் இன்று (08) பிற்பகல் 2.00மணியளவில் ஆஜர்படுத்திய வேளை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் இடிமன்.புதுநகர் பகுதியைச்சேர்ந்த பாரூக் ரமீஸ் (40 வயது) எனவும் தெரியவருகின்றது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தந்தை இவ்வாறான கீழ்தரமான செயலை செய்யவில்லையெனவும் தான் நஞ்சறுந்தப்போவதாகவும்ளை தெரிவிக்கும் அதேவேளை சிறுமியின் தாய் வெளிநாடு சென்றிருந்த நிலையில் சிறுமி தனது தந்தையால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் 16ம் திகதி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து கிண்ணியா பொலிஸார் சிறுமியின் தந்தையை சந்தேகத்தின் பேரில் நேற்றிரவு கைதுசெய்துள்ளனர்.

சிறுமி கர்ப்பமாகியிருந்த விடயத்தை மூடிமறைத்துள்ளதுடன் கடந்த மே மாதம் சிறுமி குழந்தை பிரசவித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் பின்னர் தந்தை கைது செய்யப்பட்டதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதே வேளை சிறுமி குழந்தையுடன் உறவினர் வீடொன்றில் தங்கியுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY