வட்டார பாலர் விளையாட்டு விழாவில் அப்துர் ரஹ்மான் பிரதம அதிதி !!

0
260

காத்தான்குடி மற்றும் காங்கயனோடை பிரதேசத்திலுள்ள 8 பாலர் முன்பள்ளிகள் இணைந்து நடாத்திய பாலர் வட்டார விளையாட்டு விழா 07.10.16 வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர். MLA. அஸீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நல்லாட்சி;க்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM.. அப்துர்ரஹ்மான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

8 முன்பள்ளிகளையும் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான பாலர்களின் பல வித்தியாசமான விளையாட்டு நிகழ்வுகள் இவ்விழாவில் இடம்பெற்றதுடன் அனைத்து மாணவர்களும் கலந்து சிறப்பித்த அழகிய உடற்பயிற்சிக்கண்காட்சி நிகழ்வும் இதன் போது அரங்கேற்றப்பட்டது. நிகழ்வின் இறுதியில் எட்டு முன்பள்ளிகளையும் சேர்ந்த 18 ஆசிரியைகளும் பிரதம அதிதியினால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேற்படி விளையாட்டு விழாவில் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் அவர்களினால் விஷேட உரை ஒன்றும் நிகழ்த்தப்பட்டது.

இவ்விளையாட்டு நிகழ்வில் காத்தான்குடி மத்திய கல்லாரி அதிபர் SHM. பிர்தௌஸ், பிரதி அதிபர் MLM. லாபிர் ஆசிரியர் உட்பட முன்பள்ளிகளின் நிர்வாக சபை உறுப்பினர்கள் பாடசாலை அதிபர்கள் கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஊர்ப்பிரமுகர்கள் உட்பட பெருமளவிலான பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY