(Poem) மத்தள

0
171

(Mohamed Nizous)

பறவைக் குஞ்சைப் பாரண்ணா
பறவைக் குஞ்சைப் பாரண்ணா
பறந்து வரும் பிளைட்டில் முட்டும்
பறவைக் குஞ்சைப் பாரண்ணா.

ஆளில்லா ஹோட்டலில்
ஆத்தும் டீ பாரண்ணா
பாழடைந்து கிடக்கின்ற
பஸேன்ஜர் டேர்மினல் பாரண்ணா

கம்பி வேலி உடையுது
கறுப்பு யானை வருகுது
சொம்பு நெளிஞ்சு போகுமோ
சோதனைகள் ஊழியர்க்கு.

நெல்லு காயப் போடவும்
நிலக் கடலை நாட்டவும்
நல்ல ரன்வே இருக்குது
நம்ம பணம் அழியுது.

நட்ட நடுக் காட்டிலே
நாட்டு பணத்தை கோடிகளில்
கொட்டிப் போட்ட எயார்போட்டில்
கொசு அடிக்கிறார் பாரண்ணா.

திட்டத்தை போட்டவர்க்கு
திட்டுகிறார் மனிதர்கள்
நட்டத்தில் தம் வரியும்
நாசமான காரணத்தால்.

LEAVE A REPLY