ஹைதி நாட்டில் மேத்யூ புயல்: பலி எண்ணிக்கை 842-ஆக உயர்வு

0
59

கரீபியன் கடலில் உருவான ‘மேத்யூ’ புயல் பகாமாஸ் நாடு வழியாக அட்லாண்டிக் கடலுக்குள் புகுந்து கடந்தது. இதனால் ஹைதி, அமெரிக்கா, கியூபா, பகாமாஸ் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயல் காற்றுடன் மழை கொட்டியது. இப்புயல் தாக்குதலில் அமெரிக்காவும், ஹைதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களில் மணிக்கு 140 கி.மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியது. இதனால், பலத்த மழை கொட்டியது. ரோடுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏராளமான ரோடுகள் துண்டிக்கப்பட்டன. மின்சாரம், தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டது.

கியாஸ் நிறுவனங்கள், மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் இருந்து பல லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஹைதியில் உயிரிழப்பு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை நிலவரப்படி மேத்யூ புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 842-ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் சென்றுள்ளனர். 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY