தேவையில்லாமல் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம்: குடிமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை

0
124

பாகிஸ்தான் நாட்டிற்கு பயணம் மேற்கொள்வது தொடர்பாக தன்னுடைய குடிமக்களுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் புதிய கட்டுப்படுகளை விதித்துள்ளது.

அதில், பாகிஸ்தானுக்கு தேவையில்லாமல் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பாகிஸ்தான் நாட்டில் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் குறுங்குழுவாத தாக்குதல்களும் நடைபெறுகின்றன.

குறிப்பாக சில தாக்குகள் அமெரிக்கர்களை குறி வைத்து நடத்தப்படுகின்றது. சில தீவிரவாத மற்றும் கிரிமினல் குழுக்கள் தொடர்ச்சியாக கடத்தல் சம்பவங்களில் ஈடுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 7-ம் இதேபோல் எச்சரிக்கை அறிக்கை ஒன்றினை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY