சமூகப் பணி டிப்ளோமாதாரிகளையும் கிழக்கு மாகாண சபை கவனத்திற் கொள்ளுமா: கிழக்கு சமூகப் பணி ஒன்றியம்

0
241

இலங்கை சமூக சேவை மற்றும் வலுவுட்டல் அமைச்சின் கீழ் இயங்கும் சமூகப் பணி கல்வி வழங்கும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகம் இரண்டு வருட முழு நேர பாடநெறியை நடாத்தி வருகின்றது. இதனை புர்த்தி செய்த சமூகப்பணி டிப்ளோமாதாரிகள் தாங்கள் இதுவரைக்கும் எவ்வித ஆட்சேர்ப்பிட்கும் தகைமையாக கொண்டு விண்ணப்பம் கோரப்படுவதில்லை என மாகாண சமூகப் பணி ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எடுத்துக்காட்டாக, விவசாய டிப்ளோமாதாரிகளுக்கான விவசாய போதனாசிரியர் பதவி குடியேற்ற உத்தியோகத்தர் பதவியும் விளையாட்டு விஞ்ஞான டிப்ளோமாதாரிகளுக்கு விளையாட்டு உத்தியோகத்தர் பதவிகள் வழங்கப்படுவதுன்டு. ஆனால் எமது முழு நேர சமூகப் பணி டிப்ளோமாதாரிகளுக்கு ஏன் சமூகப்பணி தொடர்பான சமூக சேவை உத்தியோகத்தர் பதவி மற்றும் அத்துறை தொடர்பான பதவிகள் ஏன் வழங்கப்படுவதில்லை என அங்கலாய்க்கின்றனர்.

எனவே இதனைக் கருத்திற் கொண்டு எமது சமூகப் பணி டிப்ளோமாதாரிகளையும் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் மாகாண சமூச சேவை அமைச்சு உட்பட இவ் நல்லாட்சி அரசிலாவது கவனத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றியம் கேட்டுக் கொள்கிறது .

LEAVE A REPLY