வர்த்தகப் பணிப்பாளர் காத்தான்குடியை பிறப்பிடமாக கொண்ட அப்துல் ரஹீம் தாய்லாந்து பயணம்

0
297

வர்த்தக வாணிப அமைச்சில் வர்த்தக பணிப்பாளராக கடமையாற்றி வரும் அப்துல் ரஹீம் , உலக வர்த்தக அமைப்பினால் (World Trade Organization ) நடாத்தப்படும் பயிற்சிக்கருத்தரங்கில் பங்கு பற்றுவதற்காக தாய்லாந்து நோக்கி பயணமானார் .

தாய்லாந்து பாங்கொக் நகரில் இடம் பெரும் இக் கருத்தரங்கில் 30 ஆசிய நாடுகலைச்சேர்ந்த அரச அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர் ஒக்டோபர் 10 ம் திகதி ஆரம்பமாகும் இக் கருத்தரங்கு ஒரு வார காலத்திற்கு இடம்பெறும்.

காத்தான்குடியை பிறப்பிடமாக கொண்ட அப்துல் ரஹீம் 1991 ஆம் ஆண்டு இலங்கை வெளிநாட்டு வர்த்தக சேவையில் இணைந்து பாகிஸ்தான் , ரஷ்யா , இந்தியா , ஜேர்மன் , மற்றும் துபாய் நாடுகளில் உள்ள இலங்கை தூதுவராலயங்களில் சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY