மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்து: ​ஒருவர் உயிரிழப்பு

0
680

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-தங்கநகர் பகுதியில் வேகமாகச்சென்ற மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் நேற்று (07) மாலை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயங்களுக்குள்ளான நிலையில் சேறுநுவர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கிளிவெட்டி-தங்கநகர் பகுதியைச்சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான நம்பிராஷா நளினிகாந் (23வயது) எனவும் காயமடைந்தவர் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த திருச்செல்வம் செல்வா (18 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் மூதூர் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY