தம்புல்லையில் விபத்து: திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் உட்பட 5 பேர் காயம்

0
699

(அப்துல் சலாம் யாசீம்)

கொழும்பிலிருந்து கிண்ணியா நோக்கி வந்து கொண்டிருந்த திருகோணமலை மாவட்ட பாராளமன்ற உறுப்பினரும் குழுத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூபின் வாகனம் தம்புள்ளை பகுதியில் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இன்று (08) அதிகாலை அவர் உட்பட அவரது பிள்ளைகள் காயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் வருகை தந்ததுடன் அவரது மகன் வாகனத்தை செலுத்தி வந்ததாகவும் தெரியவருகின்றது.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றி விட்டு கொழும்பிலிருந்து கிண்ணியாவுக்கு வந்து கொண்டிருக்கும் போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

விபத்து தொடர்பாக தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY