யாழ்.நீர்வேலி பகுதியில் சிறுமியை தாக்கிய தாயின் விளக்கமறியல் நீடிப்பு

0
307

யாழ்.நீர்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த செப்டம்பர் மாதம் 22ம திகதி தாய் ஒருவர் சிறுமியை மிக மோசமாக தாக்கிய சம்பவம் தொடர்பிலான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு , பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அது தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி கோப்பாய் பொலிசாரிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து தாயார் அன்றைய தினம் இரவு கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து மறுநாள் 23ம திகதி குறித்த தாயாரை பொலிசார் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அன்றைய தினம் பதில் நீதிவான் தாயை 6ம் திகதி (நேற்றைய தினம் ) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் , சிறுமி மற்றும் சிறுமியின் சகோதர்களை சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவு உத்தரவு இட்டு இருந்தார்.

அந்நிலையில் நேற்றைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதிஸ்கரன் முன்னிலையில் குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தாயாரை எதிர்வரும் 20ம திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் , அதுவரையில் சிறுவர் இல்லத்தின் பராமரிப்பில் குறித்த சிறுவர்கள் இருக்குமாறும் உத்தரவு இட்டார்.

LEAVE A REPLY