புயலுக்கு தென் கொரியாவில் 6 பேர் பலி

0
152

தென் கொரியாவில் “சாபா’ புயல் தாக்கியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், நான்கு பேரைக் காணவில்லை. கொரிய தீபகற்பத்தின் தென்கடல் பகுதியில் உருவாகிய சாபா புயல் காரணமாக கனமழை, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பூசான் துறைமுகம், உல்ஸான் நகரம் ஆகியவை கடும் பாதிப்புக்குள்ளாகின.

சாபா புயலுக்கு இதுவரையில் 6 பேர் பலியாகினர். மேலும், காணாமல் போன 4 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2.30 லட்சம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பின்னர் நிலைமை சீரானது. புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு நடவடிக்கைள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புயல் பாதிப்பால் உல்ஸான் நகர வீதிகளில் மழைவெள்ளம் ஆறுபோல ஓடியது. கார்கள், குளிர்சாதனப்பெட்டிகள் மிதந்து சென்றன.

அந்த நகரில் அமைந்துள்ள ஹுண்டாய் மோட்டார் நிறுவனத்தின் இரண்டு கார் ஆலைகள் மூடப்பட்டன. வெள்ள நிலைமை மோசமடைந்ததையடுத்து, இந்த நிறுவனத்தின் மற்றொரு ஆலையும் வியாழக்கிழமை மூடப்பட்டது.

பாதுகாப்பு நடவடிக்கைள் உறுதி செய்யப்பட்ட பின்னர்தான் ஆலைகளில் உற்பத்திப் பணிகள் தொடங்கும் என்று ஹுண்டாய் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY