பிரிட்டனின் ஸ்ரேலிங் பவுண் பாரிய பெறுமதி வீழ்ச்சி

0
304

பிரத்தானியாவின் ஸ்ரேலிங் பவுண் நாணயம் அண்மைக்காலத்தில் ஒரு போதும் சந்தித்திராத பாரிய பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது. ஒரு பவுண் அமெரிக்க டொலருக்கு எதிராக 1.24 ஆகவும் ஐரோப்பாவின் யூறோவுக்கு எதிராக 1.11 ஆகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை இந்திய நாணயங்களுக்கு எதிராகவும் பிரிட்டனின் பவுண் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆசிய சந்தைகளில் திடீரென ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியே இந்த பெறுமதி சரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதனால் எற்பட இருக்கும் பொருளாதார விளைவுகள் குறித்து புகழ்பெற்ற பினான்சியல் ரைம்ஸ வெளியிட்ட கட்டுரையே பிரிட்டனின் நாணய பெறுமதி வீழ்ச்சிக்கு காரணம் என்று கருதப்படுகிறது.

பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகத் தயாராவதால், பிரிட்டனுடனான பேச்சுவார்த்தைகளில் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொல்லாந்த் வலியுறுத்தியிருந்ததை மேற்கோள் காட்டி அதன் விளைவுகள் தொடர்பாக பினான்சியல் ரைம்ஸ் ஆய்வு செய்திருந்தது.

LEAVE A REPLY