அப்பிள் APP ஸ்டோரில் புதிய அம்சம்

0
306

ஐபோன்கள் மற்றும் ஐபேட்கள் எனும் உலகின் முதல்தர மொபைல் சாதனங்களை அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றமை தெரிந்ததே.

குறித்த சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை அப்பிளின் ஆப் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும்.

இந்த ஆப் ஸ்டோர் தளத்தில் இதுவரை காலமும் எவ்விதமான விளம்பரங்களும் பிரசுரம் செய்யப்பட்டிருக்கவில்லை.

இந் நிலையில் தற்போது இந்த வரையறையை மாற்றியமைத்து விளம்பர சேவையை அறிமுகம் செய்துள்ளது.

எனினும் தற்போது ஐக்கிய அமெரிக்காவிலுள்ள பயனர்களுக்கு மட்டுமே தற்போது இந்த விளம்பரம் காட்சிப்படுத்தப்படுகின்றது.

ஐக்கிய இராச்சியம் உட்பட ஏனைய நாடுகளில் விளம்பரங்கள் எதுவும் காட்சிப்படுத்தப்படவில்லை.

எனினும் எதிர்காலத்தில் ஏனைய நாடுகளிலும் இவ் வசதி கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆப் ஸ்டோர் தளத்தில் ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் தேடுதல்களுக்கு அமைய விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றது.

LEAVE A REPLY