கொலம்பிய அதிபர் மானுவல் சாண்டோசுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

0
137

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மருத்துவம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு கொலம்பிய அதிபர் மானுவல் சாண்டோஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக நோபல் குழு தலைவர் கேசி குல்மன் அறிவித்தார். கொலம்பியாவில் 50 ஆண்டு கால கிளர்ச்சியை முடிவுக்குகொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட பாடுபட்டதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 50 ஆண்டுகளாக போராடி வந்த பார்க் கிளர்ச்சியாளர்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதில் மானுவல் சாண்டோஸ் முக்கிய பங்காற்றினார்.

LEAVE A REPLY